English Blog

Monday 29 August 2016

சீறுநீரக கல் சிகிச்சைக்கான சென்னையின் மிகச்சிறந்த மையம்



சீறுநீரக கல் பிரச்சனை என்பது, இன்றைக்கு பரவலாக அனைவரையும் தாக்கக்கூடிய நோயாக மாறி வருகிறது. சிறுநீரில் உள்ள கிரிஸ்டல் எனப்படுகிற உப்புகள் (கால்சியம், ஆக்சலேட், யூரிக் அமிலம் ஆகியவை) ஒன்று திரண்டு, சிறுநீர்ப் பாதையில் பல்வேறு அளவுள்ள கற்களை உருவாக்குகிறது. சிறுநீர், சிறுநீரகத்தில் உற்பத்தியாகி, சிறுநீர் குழாய் வழியே, சிறுநீர்ப் பைகளுக்கு வந்து, பிறகு வெளியேறுகிறது. சிறுநீரகத்தில்தான் கல்லும் உற்பத்தியாகிறது. அது அங்கேயே தங்கி, வளர்ந்து அடைப்பு ஏற்படுத்துகிறது.  இதுவே சீறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது.


  • பின்பக்க விலாவில் வலி அல்லது முதுகுவலி, ஒரு பக்கம் அல்லது இரணடு பக்கத்திலும் அதிகரிக்கும் வலி
  • குமட்டல், வாந்தி
  • அடிக்கடி சிறுநீர் கழித்தல்
  • சிறுநீர் அளவு அதிகரித்தல்
  • சிறுநீரில் இரத்தம் காணப்படுதல்
  • அடிவயிற்றில் வலி
  • வலியோடு கூட சிறுநீர் கழித்தல்
  • இரவு நேரத்தில் அதிக அளவு சிறுநீர் கழித்தல்
  • ஆணின் முதன்மை இனப்பெருக்க உறுப்பில் (டெஸ்டிகல்) வலி
  • சிறுநீரின் நிறம் இயற்க்கைக்கு மாறாக காணப்படுதல்


பெரிய சிறுநீரக கற்கள் சிகிச்சைகள் :
  • எஸ்ட்ராகார்போரேல் ஷாக் வேவ் லிதோட்றிஸ்பி
  • யூரேட்டரோஸ்கோப்பி
  • பேர்குட்டானியஸ் நேபிரொலிதோடோமி
  • ஓபன் சர்ஜரி


எஸ்ட்ராகார்போரேல் ஷாக் வேவ் லிதோட்றிஸ்பி

இந்த  வகை சிகிச்சையில் நோயாளியின் சிறுநீரகத்தில் கல் அடைப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் அதிரிச்சி அலைகள் செலுத்தப்பட்டு அதன் மூலம் பெரிய கற்கள் சிறிதாக உடைக்கப்படும். உடைந்த கற்கள் நோயாளியின் சிறுநீர் வழியே வெளியே தள்ளப்படும்.

யூரேட்டரோஸ்கோப்பி :
கல் உங்கள் சிறுநீரக குழாயில் உருவாகுகிறது என்றால் நீங்கள் எடுக்க வேண்டிய சிகிக்சை யூரேட்டரோஸ்கோப்பி  சிகிக்சை ஆகும். இந்த வகை சிகிச்சையில்
யூரேட்டரோஸ்கோப் எனப்படும் ஒரு வகை தொலைநோக்கி நீர்பையுடன் இணைக்கப்பட்டு, நீர் குழாயில் கல் அடைக்கப்பட்ட இடத்திற்கு நகர்த்தப்படும். பின்பு  மருத்துவர் கருவிகளின் உதவி மூலம் கற்களை அகற்றுவார், அல்லது லேசர் மூலம் கற்கள் சிறு துகள்களாக உடைக்கப்பட்டு, நோயாளியின் சிறுநீர் மூலம்  வெளியேற்றப்படும்.

பேர்குட்டானியஸ் நேபிரொலிதோடோமி :

மேற்கூறப்பட்ட சிகிச்சைகள் எடுக்கமுயாத நோயாளிகளுக்கான சிகிச்சை  பேர்குட்டானியஸ் நேபிரொலிதோடோமி சிகிச்சை முறை ஆகும்.  இம்முறையில் தொலைநோக்கி மூலம் வயிற்றில் சிறு கீறல் போடப்பட்டு நெப்ப்ரோஸ்கோப் எனப்படும் ஒரு வகை தொலைநோக்கியை கல் இருக்கும் இடத்திற்கு அனுப்பப்பட்டு கற்கள் சிறு துகள்களாக உடைக்கப்பட்டு  குப்பைகள் வெளியே அகற்றப்படுகிறது.

இவ்வகை சிகிச்சை செய்யும் பொது நோயாளிகளுக்கு மயக்க மருந்து செலுத்தி X - ரே கட்டுப்பாட்டின் மூலம் செய்யப்படுகிறது.

ஓபன் சர்ஜரி :

இவ்வகை அறுவை சிகிச்சை மிகவும்  அரிதாக செய்யப்படுகிறது. கற்களின்  அளவு பெரியதாக இருந்தால் மட்டுமே இவ்வகை அறுவை சிகிச்சை செய்யப்படும்.  இச்சிகிச்சையில் நோயாளியின் முதுகில் கீறல் போடப்பட்டு அதன்  மூலம் கற்கள்  மிகவும் எளிதாக அகற்றப்படுகிறது.


ப்ளேடேர் ஸ்டோன் (நீர்பை கல்) :

நீர்பை கல் என்பது சிறுநீரில் கனிமங்கள் படிந்து கல் உருவாகுகிறது.  இவ்வகையான கல் பெரும்பாலும் வயதானவர்களுக்கே வரும் தன்மை கொண்டது.

நீர்பை கல் நோயின்  அறிகுறிகள்
  • சிறுநீரில் இரத்தம் வருதல்
  • வயிற்று வலி

சிஸ்டோலிதொலைபாக்ஸி  அல்லது பிரேக்கிங் ஸ்டோன் அபார்ட் :

நீர்பை கல் அகற்ற இவ்வகை சிகிக்சை முறையே பெரும்பாலும் பயன்படுத்தப்படும் மிகவும் எளிய முறை ஆகும்.  இம்முறையில் சிஸ்டோலிதொலைபாக்ஸி மூலம் ஒரு கேமிரா அனுப்பப்படுகிறது. அதன்  மூலம் மருத்துவரால் கல் இருக்கும் பகுதியை மிக எளிதாக பார்த்து கல்லை துகள்களாக்கி நீர்பையின் மூலம் வெளியேற்றப்படுகிறது.

சர்ஜிக்கள் ரிமூவல் 

சில நேரங்களில் கற்களின் அளவு மிகவும் பெரியதாக  இருந்தால் அதனை ஓபன் சர்ஜரி மூலம் அகற்றுவது மிகவும் சிரமம்.  இவ்வகை நேரங்களில் சர்ஜிக்கள் ரிமூவல் முறையின் மூலம் சிறுநீர்பையில் சிறு கீறல் போடப்பட்டு அதன்  மூலம் கீறல் அகற்றப்படுகிறது. அதில் வேறு பிரச்சனைகள் இருக்கமாயின் அதுவும் இம்முறையில் சரி செய்யப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு கிளிக் செய்யவும்:


www.urologistindia.com
Mail us : drnanandan@gmail.com








No comments:

Post a Comment